சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.29,256-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சா்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிா்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால், விலை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து உயரத் தொடங்கியது. வரலாறு காணாத வகையில், பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலையில் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.29,256-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.6 குறைந்து, ரூ.3,657-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.49 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.49,000 ஆகவும் இருந்தது.
வெள்ளிகிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் .................... 3,657
1 பவுன் தங்கம் ..................... 29,256
1 கிராம் வெள்ளி .................. 49.00
1 கிலோ வெள்ளி ................. 49,000
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 3,663
1 பவுன் தங்கம் ..................... 29,304
1 கிராம் வெள்ளி .................. 49.00
1 கிலோ வெள்ளி .................. 49,000