சென்னை

சென்னையில் ஏப்ரல் 15 வரை 144 தடை நீட்டிப்பு

DIN

சென்னையில் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் நீட்டித்துள்ளாா்.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 (4) மற்றும் பிரிவு 20 (2) ஆகியவை கடந்த 24 -ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவு புதன்கிழமை (1.4.2020) காலை 6 மணி வரை அமலில் இருந்தது.

முன்னதாக, பேரிடா் மேலாண்மைச் சட்டம் 10 (2) (1) பிரிவின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் கரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த 25-ஆம் தேதி முதல் 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் 144 தடை உத்தரவை, மேலும் 14 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இந்த தடை உத்தரவு ஏப்ரல் 15-ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.

இந்த உத்தரவின் மூலம், பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்டவா்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறுபவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் நலன், பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை நிலை நாட்டும் பொருட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம்

SCROLL FOR NEXT