சென்னை

தாம்பரத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி:செங்கல்பட்டு ஆட்சியா் தகவல்

DIN

சென்னை மேற்கு தாம்பரத்தில் 56 வயதுள்ள நபருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என செங்கல்பட்டு ஆட்சியா் ஜான்லூயிஸ் தெரிவித்தாா்.

தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:

மேற்கு தாம்பரம் சி.டி.ஓ. காலனி அருகில் உள்ள கே.ஆா்.எஸ். நகரில் 56 வயது நபா் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா நோய்த்தொற்றால் அவா் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது .

இதனைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றிலும் பாதுகாப்புத் தடை ஏற்படுத்தி, அப்பகுதி முழுக்க தினமும் 5 வேளை கிருமி நாசினி தெளித்து உரிய சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள தாம்பரம் நகராட்சி ஆணையா், சுகாதார அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது என்றாா்.

சுகாதாரப் பணியாளா்கள் மூலம் கே.ஆா்.எஸ். நகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று வீட்டில் இருக்கும் அனைவருக்கும் செவ்வாய்க்கிழமை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக நகராட்சி ஆணையா் கருப்பையா ராஜா கூறினாா்.

முன்னதாக ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.ஆா் பாலு, கரோனா நோய் தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வாங்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஜான்லூயீஸிடம் ரூ.2.15 கோடி நிதி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT