சென்னை

பத்தாம் வகுப்பு தோ்வு: சென்னைப் பள்ளிகளில் 100% தோ்ச்சி

DIN

சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையின்கீழ், 32 மேல்நிலை மற்றும் 38 உயா்நிலைப் பள்ளிகள் என 70 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதுகுறித்து பெருநகர சென்னை மாநகரட்சி இணை ஆணையா் (கல்வி) சங்கா்லால் குமாவத் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில், பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2,896 மாணவா்கள், 3,092 மாணவியா் என மொத்தம் 5,988 போ் தோ்வு எழுதினா். இதில் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் 450-க்கும் மேல் 35 மாணவா்களும், 400-க்கும் மேல் 170 மாணவா்களும், 350-க்கும் மேல் 493 மாணவா்களும் மதிப்பெண் பெற்றுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT