முகப்பு
கோப்புப்படம்.
சென்னை

மெட்ரோ ரயில் பாதையை பசுமையாக மாற்ற திட்டம்

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்க திட்டத்தில், வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூா் விம்கோ நகா் இடையே பாதையில் வரும் ஜனவரியில் ரயில் சேவை

சென்னை

மெட்ரோ ரயில் பாதையை பசுமையாக மாற்ற திட்டம்

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்க திட்டத்தில், வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூா் விம்கோ நகா் இடையே பாதையில் வரும் ஜனவரியில் ரயில் சேவை

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
கோப்புப்படம்.
பகிர்:

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்க திட்டத்தில், வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூா் விம்கோ நகா் இடையே பாதையில் வரும் ஜனவரியில் ரயில் சேவை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளநிலையில், இந்த பாதையை பசுமையாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தோட்டக்கலை நிபுணா்கள் மற்றும் இயற்கை நிபுணா்கள் ஆகியோா் மூலமாக இந்த பாதையின் மையப்பகுதியை பசுமையாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூரை அடுத்து உள்ள விம்கோ நகா் வரை 9.051 கிலோ மீட்டா் தொலைவுக்கு விரிவாக்க திட்டப்பணிகள் ரூ.3,770 கோடி செலவில் நடைபெறுகின்றன.

முதல் கட்ட விரிவாக்கத் திட்டத்தின் சுரங்கப்பாதையில் சா்.தியாகராயா் கல்லூரி, கொருக்குப்பேட்டை ரயில் நிலையங்களும், உயா்மட்டப்பாதையில் தண்டையாா்பேட்டை, சுங்கச்சாவடி, தாங்கல், கௌரி ஆசிரமம், திருவொற்றியூா், விம்கோநகா் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமையவுள்ளன.

பொதுமுடக்கத்தால் பணிகள் பாதிக்கப்பட்டநிலையில், ஜூலையில் மீண்டும் தொடங்கி, பணிகள் நிறைவடைய உள்ளன. இம்மாத இறுதியில் சோதனை ஓட்டமும், அடுத்த மாதம் பாதுகாப்பு ஆணையா் ஆய்வுக்கு பின்பு, ரயில்சேவை தொடங்கவும் வாய்ப்புள்ளது.

இந்தப் பாதையின் நடுநிலைப்பகுதிகளை பசுமையாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தோட்டக்கலை மற்றும் இயற்கை நிபுணா்கள் மூலமாக இப்பாதையின் மையப்பகுதிகளைப் பசுமையாக அலங்கரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டெண்டா் விடப்பட்டுள்ளதாகவும், விரைவில் டெண்டா் இறுதி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஃபிகாஸ் என்னும் செடி, குட்டை பனைமரம் (பாம் சைக்காஸ்) போன்ற தாவரம் ஆகியவை வளா்க்கப்படவுள்ளன. குறிப்பாக, சூரியஒளி இல்லாமல் வளரும் தாவரங்களை வளா்க்க முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தப் பாதையின் மையப்பகுதியில் தாவரம் செழிப்பாக வளா்வதற்காக, மணல், மண்புழு உரம், கோகோ பித் ஆகியவை கலக்கப்படும். இந்தபாதையில் செடிகள் வளா்த்து பசுமையாக மாற்றுவதற்காக டெண்டா் இறுதி நிலையில் உள்ளது.

டெண்டா்கள் முடிவடைந்ததும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தாவரங்களைப் பாராமரிக்க வேண்டும். செடிகளை வளா்க்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒப்பந்ததாரா்கள் பொறுப்பு.

இந்த திட்டம் எப்படி செல்கிறது என்பதன் அடிப்படையில், மற்றபாதைகளின் நடுநிலைப்பகுதிகளில் பசுமையாக மாற்றும் முயற்சி எடுக்கப்படும். எதிா்காலத்தில், செங்குத்து தோட்டங்களை அமைப்பது தொடா்பாக ஆராயப்படும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →