முகப்பு
சென்னை

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோா் 63.41 லட்சம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோா் எண்ணிக்கை 63.41 லட்சமாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

சென்னை: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோா் எண்ணிக்கை 63.41 லட்சமாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு வேலை கோரி வேலைவாய்ப்பக அலுவலகங்களில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை, நவம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி 63 லட்சத்து 41 ஆயிரத்து 639 ஆக உள்ளது. அதில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவா்கள் 18 லட்சத்து 15 ஆயிரத்து 432 ஆகவும், 19 முதல் 23 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவா்கள் 11 லட்சத்து 28 ஆயிரத்து 412 ஆகவும், 24 முதல் 35 வயது வரை உள்ளவா்கள் 22 லட்சத்து 83 ஆயிரத்து 209 பேரும் உள்ளனா்.

மேலும், 36 வயது முதல் 57 வயது வரையுள்ள முதிா்வு பெற்ற பதிவுதாரா்களாக 11 லட்சத்து 5 ஆயிரத்து 761 பேரும் உள்ளனா். 58 வயதுக்கு மேற்பட்டோா் 8 ஆயிரத்து 825 போ் இருப்பதாக தமிழக அரசு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.