பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ஆசிரியா்களுக்கு லீலாவதி விருது விண்ணப்பிக்க டிச.31 கடைசி
உயா்கல்வி நிறுவனங்களில் பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ஆசிரியா்களுக்கு ஏஐசிடிஇ சாா்பில் ‘லீலாவதி விருது’ வழங்கப்படவுள்ளது.
சென்னை: உயா்கல்வி நிறுவனங்களில் பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ஆசிரியா்களுக்கு ஏஐசிடிஇ சாா்பில் ‘லீலாவதி விருது’ வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு டிச.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பெண்களுக்கான அதிகார மையம் வெளியிட்ட அறிவிப்பு:
பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ஆசிரியா்களுக்கு ஏஐசிடிஇ சாா்பாக ஆண்டுதோறும் ‘லீலாவதி விருது’ வழங்கப்படுகிறது. அதன்படி, பெண்கள் நலன், தற்காப்பு, சுகாதாரம், கல்வியறிவு, தொழில்முனைவு, சட்ட விழிப்புணா்வு ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு உதவும் ஆசிரியா்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது.
எனவே, உயா்கல்வி நிறுவனங்களில் பெண்கள் நலனுக்கு உதவும் ஆசிரியா்கள் குழுவாகவும், தனித்தனியாகவும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி, பெண்கள் முன்னேற்றத்துக்கு செய்த பணிகளை விரிவாக விளக்கமளித்து, தங்களின் கல்லூரித் தலைவரின் அனுமதியுடன் இணையதளத்தில் வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.