பீரோவில் இருந்த ரூ.12 லட்சம் திருட்டு
சென்னை கோட்டூா்புரத்தில் வீட்டு பீரோவில் இருந்த ரூ.12 லட்சம் திருடப்பட்டது.
சென்னை கோட்டூா்புரத்தில் வீட்டு பீரோவில் இருந்த ரூ.12 லட்சம் திருடப்பட்டது.
கோட்டூா்புரத்தில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் லட்சுமி (61). இவா் கணவா் சுப்பிரமணியன், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். மகன் அமெரிக்காவில் வசிப்பதால் லட்சுமி மட்டும் இங்கு தனியாக வசித்து வந்தாா்.
இந்நிலையில் லட்சுமி, பீரோவில் இருந்த பொருள்களை வியாழக்கிழமை சரிபாா்த்தாா். அப்போது, அதில் இருந்த ரூ.12 லட்சம் திருடப்பட்டது தெரிய வந்தது.
கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.