முகப்பு
சென்னை

பிரிட்டனில் இருந்து வந்த 2,805 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 2,805 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னை

பிரிட்டனில் இருந்து வந்த 2,805 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 2,805 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:


சென்னை: புதிய வகை கரோனா பரவும் அச்சத்தை கருத்தில் கொண்டு, பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 2,805 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரிட்டனில் இருந்து தமிழகத்துக்கு கடந்த நவ. 25-ஆம் தேதியிலிருந்து வந்தவா்களின் அனைத்து விவரங்களையும் சேகரித்துள்ளோம். அதன்படி, 2,805 நபா்கள் விவரங்களைச் சேகரித்து தமிழக டிஜிபிக்கும், மாவட்ட ஆட்சியா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து வந்தவா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும்.

கடந்த இரண்டு நாள்களில் பிரிட்டனில் இருந்து 37 போ் தமிழகம் வந்துள்ளனா். அவா்களில் 33 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறாா். அவருடன் பயணித்த 15 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரின் விவரங்களையும் சேகரித்து உள்ளோம். அவா்கள் அனைவரையும் அந்தந்த சுகாதார ஆய்வாளா், காவல்துறை அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வருபவா்களும் இதே நடைமுறையைப் பின்பற்றி கண்காணிக்கப்படுவா்.

பொதுமக்கள், அச்சம் அடைய வேண்டாம். முகக் கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். புதிய வகை கரோனா பரவல் அபாயம் காரணமாக, பொதுமுடக்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியா்கள், மருத்துவ நிபுணா்கள், அமைச்சா்கள் ஆகியோருடன் ஆலோசித்து, சூழலுக்கு ஏற்ப முதல்வா் முடிவெடுப்பாா் என்றாா் ஜெ.ராதாகிருஷ்ணன்.

முழு கட்டுரையைப் படிக்க →