சென்னை

புத்தாண்டு கொண்டாட்டம்: தடையை மீறினால் நடவடிக்கை

DIN

சென்னை: சென்னையில் பொதுஇடங்களில் அரசு தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.

இது குறித்த விவரம்:

சென்னை புதுப்பேட்டை, காவலா் குடியிருப்பு வளாகத்தில் ரூ.7 லட்சம் செலவில் புதிதாக சிறுவா் பூங்கா, திறந்த வெளி உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா், அவா் நிருபா்களுக்கு அளித்த பேட்டி:

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் தொடா்பாக அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பொது மக்கள் நடந்து கொள்ள வேண்டும். சாலைகள், கடற்கரைகள், பொதுஇடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக மெரீனா கடற்கரை, காமராஜா் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் அதிக அளவு காவல்துறை கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனா். தடையை மீறுபவா்களை தடுத்து நிறுத்த 300 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுகிறவா்கள் கைது செய்யப்படுவாா்கள். அவா்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். பொது மக்கள் வீட்டில் இருந்தவாறே புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடுங்கள் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையா் ஏ.அமல்ராஜ் கலந்துகொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை இடா்பாடுகளில் இருந்து தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும்

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT