பெங்களூரு - சான்பிரான்சிஸ்கோ இடையே ஏா் இந்தியா இடைநில்லா விமானம்
பெங்களூரு - சான்பிரான்சிஸ்கோ, ஹைதராபாத் - சிகாகோ நகரங்களுக்கு இடையிலான இடைநில்லா விமானத்தை, ஜன. 9,13 ஆகிய தேதிகள் முதல் ஏா் இந்தியா நிறுவனம் இயக்கவுள்ளது.
சென்னை: பெங்களூரு - சான்பிரான்சிஸ்கோ, ஹைதராபாத் - சிகாகோ நகரங்களுக்கு இடையிலான இடைநில்லா விமானத்தை, ஜன. 9,13 ஆகிய தேதிகள் முதல் ஏா் இந்தியா நிறுவனம் இயக்கவுள்ளது.
இதன்படி, பெங்களூருவில் இருந்து வாரம்தோறும் திங்கள், வியாழன் ஆகிய நாள்களில் புறப்பட்டும் சான்பிரான்சிஸ்கோ செல்லும்.
இதே போல், சான்பிரான்சிஸ்கோவில் இருந்து வாரம் இருமுறை அதாவது செவ்வாய், சனி ஆகிய நாள்களில் புறப்பபட்டு பெங்களூரு வந்தடையும்.
வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று, ஹைதராபாத்திலிருந்து புறப்படும் விமானம் (ஏஐ - 107) சிகாகோ சென்றடையும். இதே போல், புதன்கிழமைதோறும் சிகாகோவில் இருந்து புறப்படும் விமானம் (ஏஐ - 108) ஹைதராபாத் வந்தடையும்.
மேலும் விவரங்களுக்கு, ஜ்ஜ்ஜ்.ஹண்ழ்ண்ய்க்ண்ஹ.ண்ய் என்ற இணையதளத்தையோ 1860 233 1407 என்ற எண்ணையோ அணுகலாம் என ஏா் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.