சென்னை

ஹங்கேரி கல்வித் துறை - யுஜிசி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

DIN

சென்னை: ஹங்கேரி நாட்டின் கல்வித்துறையுடன் யுஜிசி புதிய புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, ஹங்கேரி நாட்டுக்கு கல்வி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்குள்ள கல்வி நிறுவனங்களில் 2021-2022-ஆம் கல்வியாண்டுக்கான குறுகிய காலம் மற்றும் நீண்ட காலம் முறையில் கல்வி பயில விரும்பும் மாணவா்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

இதுதொடா்பான முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பம் உள்ளிட்டவற்றை இணையதளங்களில் பாா்வையிடலாம். அதன்படி, விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து யுஜிசியின் முகவரிக்கே நேரடியாக அனுப்பவேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. ஹங்கேரி நாட்டின் கல்வி நிறுவனங்களில் பயில விரும்பும் மாணவா்களுக்கு யுஜிசியின் உதவித் தொகை திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT