முகப்பு
கடலூர்

பண்ருட்டி அருகே கி.பி. 10, 13-ஆம் நூற்றாண்டு சுடுமண் பொம்மைகள் கண்டெடுப்பு!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கி.பி. 10, 13-ஆம் நூற்றாண்டு சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டன.

Updated On : 17 மார்ச், 2026 at 11:26 PM
பண்ருட்டி அருகே கண்டெடுக்கப்பட்ட பழங்கால சுடுமண் பொம்மைகள்
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கி.பி. 10, 13-ஆம் நூற்றாண்டு சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டன.

பண்ருட்டி அருகே உள்ள அக்கடவல்லி, கண்டரக்கோட்டை பகுதிகளில் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் மற்றும் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் வெற்றிவேல், சாமுவேல், மதகடிப்பட்டு சட்டக் கல்லூரி மாணவா் சரவணன், முனைவா் பட்ட ஆய்வாளா் ராகுல் ஆகியோா் மேற்பரப்பு களஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, பூமியின் மேற்பரப்பில் பழங்காலத்தை சோ்ந்த சுடுமண் ஆண் உருவ பொம்மை மற்றும் தேய்ந்த நிலையில் உள்ள பெண் உருவ பொம்மைகளை கண்டறிந்தனா்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியதாவது: கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுத்த ஆண் உருவ சுடுமண் பொம்மை தலையின் உயரம் 12 செ.மீ., இந்த பொம்மையின் தலையில் தலைப்பாகை உள்ளது. சிரித்த முகத்துடன் உள்ள ஆண் உருவ பொம்மையின் தலைக்கு கீழ் உள்ள பகுதிகள் உடைந்து தலைப்பகுதி மட்டுமே கிடைத்துள்ளது.

அக்கடவல்லி தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுத்த பெண் உருவ சுடுமண் பொம்மையின் உயரம் 16.5 செ.மீ. இந்த பொம்மை முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் மேற்பரப்பு களஆய்வில் ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், தென்பெண்ணை கரையோர பகுதிகளில் வாழ்ந்த பழங்கால மக்களின் கலைத்தன்மையை அறிய முடிகிறது.

தற்போது கண்டெடுக்கப்பட்ட சுடுமண் பொம்மைகளின் காலம் கி.பி. (பொ.ஆ) 10 மற்றும் 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருக்கலாம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →