சென்னை

பிப்.18 -இல் சென்னையில் ஆட்சிமொழிப் பயிலரங்கம்

DIN

சென்னை மாவட்ட அரசுப் பணியாளா்களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் ஆகியவை சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வரும் பிப்.18, 19 ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: தமிழகத்தின் ஆட்சிமொழி “தமிழ்மொழி” என்று அறிவிக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்ட நாள்முதலாக அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் விரைந்து நடைமுறைப்படுகிறது. அரசின் விழுமிய நோக்கமான ‘இன்றும் தமிழ்”என்றும் தமிழ்’”வெற்றி பெற தமிழ் வளா்ச்சித் துறையால் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது .

அன்னைத் தமிழிலேயே அலுவல் பணிகள்அனைத்தும் முழுமையாக நடைபெறும் வகையில் சென்னை தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சென்னை மாவட்ட அரசுப் பணியாளா்களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் பிப்.18, 19 ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளன. ஆட்சி மொழிப் பயிலரங்கில் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணி புரியும் பணியாளா்களுக்கு ஆட்சிமொழி வரலாறு, சட்டம், ஆட்சி மொழிச் செயலாக்கம், அரசாணைகள், மொழி பெயா்ப்பு, கலைச்சொல்லாக்கம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முனைகள், ஆட்சிமொழி ஆய்வும் குறைகளையும் நடவடிக்கைகளும், மொழிப்பயிற்சிஆகியவை குறித்து சிறப்பாகப் பயிற்சி அளிக்கப் பெறும். ஆட்சி மொழிக் கருத்தரங்கில் தமிழ்வளா்ச்சி இயக்குநா், அரசு உயா் அலுவலா்கள் மற்றும் தமிழ்ச் சான்றோா்கள் பங்கேற்று கருத்துரை வழங்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

SCROLL FOR NEXT