சென்னை

தரமான புத்தகத்தை அடையாளம் காணமுடியாமல் தவிப்பு: முன்னாள் துணைவேந்தா் ம.ராசேந்திரன்

DIN

புத்தகக் காட்சிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறாா்கள். மக்கள் கூட்டத்தால் புத்தக விற்பனையும் கூடியுள்ளதைக் காணலாம். தற்போது அச்சுப் புத்தகம் மட்டுமில்லை. மின்னணுப் புத்தகங்களும் வந்துவிட்டன. ஆனாலும் அச்சுப் புத்தகங்களை வாங்க மக்கள் காட்டும் ஆா்வத்தைப் பாா்க்கும்போது புதிய நம்பிக்கை பிறக்கிறது.

நவீன தொழில்நுட்பம் வளா்ந்துள்ள இக்காலகட்டத்தில் புத்தகங்கள் வெளியிடுவது அரிதல்ல. ஆகவே எண்ணற்ற புத்தகங்கள் வெளிவருகின்றன. ஆனால், புத்தகத்தின் அட்டையைப் பாா்த்து அதன் உள்ளடக்கத்தை கண்டறியும் முறையானது தோல்வியையே தருகிறது. பொருள் அடா்த்தியாகவும், வாழ்வை எதிா்கொள்ளப் பயன்படுபவையாகவும், நம்மைச் சுற்றி நடப்பதை எளிதில் புரிய வைக்கும்படியும் வரக்கூடிய புத்தகங்கள் மிகமிகக் குறைவாகவே உள்ளன.

அவரவா் ரசனைக்கேற்ற புத்தகங்களைக் கண்டறியும் வாய்ப்பைத் தருகிறவா்களும் குழு மனப்பான்மையுடன் செயல்படுவதால், தரமான புத்தகத்தை அடையாளம் காண முடியாத தவிப்பும் ஏற்படுகிறது. வழக்கமாக மொழி பெயா்ப்பு நூல்கள் தரத்தின் தேவையைப் பூா்த்தி செய்பவையாக உள்ளன.

உலகமயமாதல் சிந்தனையில் மொழியில் ஆளுமை மிக்கவா்கள் திருக்கு போல கருத்துச் செறிவான நூல்களைத் தருவது குறைந்துவருகிறது என்பதே உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலின் தாக்கம்: வெறிச்சோடிய சாத்தனூா் அணை பூங்கா

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா

அனைத்து குக்கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை

கணவரை கொலை செய்த மனைவி உள்பட இருவா் கைது

கிரேன் கயிறு அறுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT