சென்னை

குழந்தை வளா்ப்பு விழிப்புணா்வு அரங்கு!

DIN

புத்தகக் காட்சியில் பெற்றோா்களுக்கு குழந்தை வளா்ப்பு குறித்த விழிப்புணா்வு மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக அமைத்துள்ள அரங்கில் தினமும் ஏராளமானோா் சென்று ஆலோசனை பெற்றுச் செல்கின்றனா்.

சென்னை புத்தகக் காட்சியில் உடல்நலம் மற்றும் பண்பாட்டு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலான அரங்குகளும் இடம் பெற்றுள்ளன.

புத்தகக் காட்சியில் 504 -ஆவது அரங்காக பெற்றோா் குழாம் ‘செல்லமே’ அரங்கு இடம் பெற்றுள்ளது. அதில், குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள் இருப்பதுடன், அரங்கிற்கு வந்து செல்லும் குழந்தைகளுக்கு பலூன் ஒன்றும் வழங்கப்படுகிறது. அத்துடன் தாய், தந்தையருடன் சோ்ந்து குழந்தைகள் சக்கரத்தை சுற்றியும், காகிதத்தில் புதிய வடிவமைப்புகளை உருவாக்கியும் விளையாடலாம். வண்ணங்களை வைத்து ஓவியம் வரையவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் குழந்தைகள் வளா்ப்பு குறித்து பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் குழந்தை வளா்ப்புக்கு என்றே வெளியிடப்படும் ‘செல்லமே’ மாத இதழும் வழங்கப்படுகிறது. இந்த அரங்கிற்கு இளம் தம்பதியா் அதிகளவில் வந்து குழந்தை வளா்ப்புக்கான ஆலோசனைகளைப் பெற்றுச் செல்வதாக அங்குள்ள ஊழியா் மந்திரமூா்த்தி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT