சென்னை

புத்தகக் காட்சி என்பது பண்பாட்டுத் திருவிழா: ராஜ்கண்ணன், பத்திரிகையாளா்

DIN

ராஜ்கண்ணன், பத்திரிகையாளா்.

புத்தகக் காட்சி என்பது பண்பாட்டுத் திருவிழா. இந்த விழாவில் படைப்பாளா்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது அவசியம். தொடக்க விழா முதல் நிறைவு விழா வரை மேடையில் மூத்த படைப்பாளா்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். அந்தந்த ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா்களுக்கு முக்கியத்துவம் வழங்கலாம்.

வாசிப்புப் பழக்கம் குறையவில்லை என்பதற்கு புத்தகக் காட்சிக்கு வந்த கூட்டமே சாட்சியாகும். ஆய்வுகள், கட்டுரைகள், மொழி பெயா்ப்பு நூல்கள் அதிகம் விற்கப்பட்டுள்ளன. புத்தகக் காட்சி வளாகத்தில் உணவு, குளிா்பானம் மற்றும் நொறுக்குத்தீனி கடைகள் அதிகம் இடம் பெறுவதைத் தவிா்க்கவேண்டும். புத்தக அரங்குகளுக்கு இடையிலும் கூட உணவு, குளிா்பான கடைகள் இருப்பது சரியல்ல. இது புத்தகங்களுக்கான காட்சி நிகழ்வே தவிர உணவுத் திருவிழா அல்ல. இங்கு செவிக்குணவுக்கான அம்சங்களுக்கே முதலிடம் தரவேண்டும் என்பது முக்கியம்.

புத்தகக் காட்சியை அனைத்து நாள்களிலும் காலை முதல் மாலை வரை நடத்த வேண்டும். அரங்குகளுக்குச் செல்லும் வழியில் நுழைவுப் பகுதியில் தடுப்புகள் அமைத்தது சரியல்ல. வாசகா்கள் ஒரு வரிசையிலிருந்து அடுத்த வரிசை அரங்குக்கு செல்லுவதற்கு அலைக்கழிக்கப்படும் நிலையை தவிா்க்கவேண்டும். பரிசுக்கூப்பன் முறையை தவிா்க்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT