சென்னை

போராட்டம் நடத்த முன் அனுமதி பெற வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அறிவிப்பு

DIN

சென்னை: சென்னையில் போராட்டம் நடத்த முன் அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும் என பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு நகர காவல் சட்டம் 41-ஆவது பிரிவின்படி, சென்னை மாநகர காவல் எல்லையில் சில கட்டுப்பாடுகள் பிப்ரவரி 12-ஆம் தேதி வரை (15 நாள்கள்) விதிக்கப்படுகிறது.

அதன்படி, போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மனிதச் சங்கிலி, கூட்டம், பேரணி உட்பட பொது இடங்களில் நடத்தப்படும் அனைத்து விதமான நிகழ்ச்சிகளுக்கும் காவல்துறையிடம் கட்டாயம் முன்அனுமதி பெற வேண்டும். போராட்டங்கள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் 5 நாள்களுக்கு முன்னதாகவே தகவல் தெரிவித்து, அதற்கு முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

SCROLL FOR NEXT