சென்னை

ஹோமியோபதி இயக்குநரகத்தில் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க பிப்.5 கடைசி

DIN

சென்னை: ஹோமியோபதி இயக்குநரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, பிப்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தில் காலியாக உள்ள நான்கு அலுவலக உதவியாளா் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்தப் பணிகளுக்கு 8-ஆம் வகுப்பு வரை தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயா்கல்வி படித்தவா்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. இலகுரக நான்கு சக்கர வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 வயதும், ஏனைய பிரிவினருக்கு 32 வயதும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயது என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட தகுதியுடையோா் தங்களது பெயா், கல்வித்தகுதி, பிறந்த தேதி, ஜாதி சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஓட்டுனா் உரிமம், ஆதாா் எண், முகவரி, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை பூா்த்தி செய்து தொடா்புடைய சான்றிதழ்களின் நகல்களுடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒட்டிய

விண்ணப்பத்தினை சுய விலாசம் இடப்பட்ட உறையுடன் இயக்குநா், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம், அரும்பாக்கம், சென்னை-106 என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலம், பிப்.5-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT