சென்னை

4 லட்சத்து 67 ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம்: தமிழக அரசு தகவல்

DIN

தமிழகத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 4 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு  தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், மகராஷ்டிராவில் உள்ள சங்லி மாவட்டத்தில் உள்ள குப்வாட் கிராமத்தில் கணேசன் என்பவர் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இருந்து மகராஷ்டிராவுக்கு வாழ்வாதாரத்துக்காகச் சென்ற தமிழர்கள் பொதுமுடக்கத்தால் தமிழகம் திரும்ப முடியவில்லை. சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என  உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில்,  மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களில் ஒரு சதவீதத்தைக் கூட தமிழக அரசு பயன்படுத்தவில்லை என மத்திய உணவுத்துறை அமைச்சர் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது அரசு தரப்பில், தமிழகத்தில் 5.66 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர்.  சென்னையில் மட்டும் 58 ஆயிரத்து 509 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர்.இவர்களில், 4.60 லட்சம் தொழிலாளர்களுக்கு மே மாதம் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 4.67 லட்சம் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  மத்திய உணவுத்துறை அமைச்சர் தமிழக அரசு குறித்து தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கலந்தாய்வு மையங்கள் அமைப்பது தொடர்பாகவும், வெளிமாநில தொழிலாளர்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்குவதற்கான மையங்கள் அமைப்பது தொடர்பாகவும் தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூலை 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT