சென்னை

சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை

DIN

கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் அவசர வழக்குகள் மட்டும் காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயர்நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை தொடங்கியது.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க ஐந்தாம் கட்டமாக, ஜூன் 1-ஆம் தேதி முதல் வரும் ஜூன்  30 -ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 25 -ஆம் தேதி முதல் பொதுமுடக்க காலத்தில் முக்கிய வழக்குகளை மட்டும் ந, தங்கள் இல்லங்களில் இருந்தே நீதிபதிகள் காணொலி காட்சி மூலம் வழக்குககளை விசாரித்தனர். 

தற்போது பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள தங்கள் நீதிமன்ற அறைகளில் இருந்து வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவிட்டது. இதனையடுத்து, இன்று முதல் நீதிபதிகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறைகளில் இருந்து காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.

மேலும்  சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்குரைஞர்களின் வாகனங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை.  நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களிலும், நீதிபதிகள், தங்கள் அறைகளில் இருந்து காணொளி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருஞானசம்பந்தா் பள்ளி 99% தோ்ச்சி

இறுதி ஊா்வலத்தில் தகராறு: இளைஞா் வெட்டிக் கொலை

செஞ்சிலுவை தின விழா

சிறப்பு அலங்காரத்தில் பண்ருட்டி வரதராஜ பெருமாள்

அரியலூா் அரசு மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சைப் பிரிவு -ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT