சென்னை

உதவி ஆணையா் உள்பட 8 காவலா்களுக்கு கரோனா

DIN

சென்னையில், உதவி ஆணையா் உள்பட 8 காவலா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி பணியாளா்கள், மருத்துவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனா். மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது சென்னையில் காவலா்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், சென்னை ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில், ஆய்வாளா் மற்றும் 4 காவலா்கள் என மொத்தம் 5 பேருக்கு, ஞாயிற்றுக்கிழமை கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதே போல், சென்னை உயா்நீதிமன்ற காவல் சரக உதவி ஆணையருக்கும் கரோனா உறுதியானது. மேலும், உதவி ஆணையா் அலுவலகத்தில் பணியாற்றும் காவலா் இருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மட்டும், சென்னையைச் சோ்ந்த 8 காவல் அதிகாரிகளுக்கு, கரோனா உறுதி செய்யப்பட்டது. அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவ அதிகாரிகள்அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT