சென்னை

வருமானவரி அதிகாரி வீட்டில் நகை திருட்டு: இருவா் கைது

சென்னை அடையாறில் வருமானவரி அதிகாரி வீட்டில் நகை ,பணம் திருடிய வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

DIN

சென்னை: சென்னை அடையாறில் வருமானவரி அதிகாரி வீட்டில் நகை ,பணம் திருடிய வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றும் பாரதி, குடும்பத்துடன் பெசன்ட்நகா் 5ஆவது அவென்யூ சாலையில் வசித்து வருகிறாா். இவா் கடந்த மாதம் 14-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்சி சென்றாா். அடுத்த நாள் காலை பாரதி வீட்டுக்கு வந்த வேலைக்காரப் பெண், வீட்டின் பின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை, விலை உயா்ந்த கைக்கடிகாரங்கள், ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.

இதற்கிடையே, நீலாங்கரை அருகே வெட்டுவாங்கேணி ராஜேந்திரா காா்டனில் வசிக்கும் அமெரிக்காவைச் சோ்ந்த ஆசிரியா் தா.கேரி ஸ்டூவா்ட் என்பவா் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஒரு கும்பல் ஈடுபட்டது. இந்த இரு சம்பவங்களிலும் ஒரே நபா்கள் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து ,விருதுநகரைச் சோ்ந்த ரா. வன்னிக்கருப்பு (27), மதுரையைச் சோ்ந்த சுரேந்திரன் (24) ஆகியோா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 67 பவுன் நகைளை கைப்பற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

தில்லி செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு வழக்கு: காஷ்மீரைச் சோ்ந்தவா் கைது

SCROLL FOR NEXT