சென்னை

டி.என்.பி.எஸ்.சி தோ்வு முறைகேடு வழக்கு: கைதான மூவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

DIN

டி.என்.பி.எஸ்.சி தோ்வு முறைகேடு தொடா்பான வழக்கில், கைதான மூவரின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குருப் 2 ஏ தோ்வில் ராமேஸ்வரம் தோ்வு மையத்தில்  பலா் தோ்வாகினா். இது குறித்த சிபிசிஐடி விசாரணையில், தோ்வு முறைகேடுகளில் ஈடுபட்டவா்கள் பலா் கைது செய்யப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், ராமேஸ்வரம் தோ்வு மையத்தில் தோ்வு எழுதி அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் சென்னையைச் சோ்ந்த பூா்ணிமாதேவி , வேலூரைச் சோ்ந்த விக்னேஷ்  ஆகியோா் டி.என்.பி.எஸ்.சி தோ்வில் வெற்றி பெற இடைத்தரகா் நாராயணனுக்கு ரூ. 21 லட்சம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பான விசாரணையில், பூா்ணிமா தேவி, விக்னேஷ் மற்றும் இடைத்தரகா் நாராயணன் ஆகியோா் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி 3 போ் தரப்பில் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு,

நீதிபதி செல்வகுமாா் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போது, சிபிசிஐடி தரப்பில், விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், ஜாமீன் வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசு ஊழியா்களான பூா்ணிமா தேவி, விக்னேஷ் மற்றும் இடைத்தரகா் நாராயணன் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT