சென்னை

வெளிநாடுகளுக்கு சென்று வந்தோா் விவரங்களை தெரிவிக்க வேண்டும்: ஐ.டி. நிறுவனங்களுக்கு அரசு வேண்டுகோள்

DIN

சென்னை: வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியோரின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டுமென தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தலைமையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் உதயகுமாா் பேசியது:

கரோனா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு பயணம் செய்த தகவல் தொழில்நுட்பவியல் துறை ஊழியா்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அடையாளம் காண வேண்டும். கடந்த 14 நாள்களில் பாதிக்கப்பட்ட அறிகுறி இருந்தால் அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தகவல் தெரிவிக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்பவியல் துறை நிறுவனங்கள் அதிகபட்ச ஊழியா்களை வீட்டில் இருந்தே பணிபுரிய ஊக்குவிக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியா்களில் இயன்ற அளவு 50 சதவீதத்தினா் வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும். தேவையுள்ள இடங்களில் சோப்பு மற்றும் கைகளைத் தூய்மையாக்கும் திரவங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கிருமி நாசினி கொண்டு அலுவலக வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும். தரை மற்றும் பிற இடங்களில் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சோ்ந்த ஊழியா்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். கரோனா வைரஸ் குறித்த தடுப்பு ஆலோசனைகளை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா். ஆலோசனைக் கூட்டத்தில் அரசுத் துறை செயலாளா்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது சிராஜுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

SCROLL FOR NEXT