சென்னை

மக்களின் பசியைப் போக்கிய "அம்மா' உணவகங்கள்

DIN

சென்னை: மக்கள் ஊரடங்கையொட்டி, சென்னையில் அனைத்து உணவகங்களும் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருந்த நிலையில் தொழிலாளர்களுக்கும்,  அறை எடுத்து தங்கியுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பசியைப் போக்கும் அட்சயப் பாத்திரமாக மாநகராட்சி "அம்மா' உணவங்கள் விளங்கின.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஊரடங்கால் சென்னையில் உள்ள தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 
இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்  அறை எடுத்து தங்கியுள்ளதுடன், அவர்கள் பெரும்பாலும் உணவகங்களை நம்பியே உள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு காரணமாக சென்னையில் உள்ள அனைத்து உணவகங்களும் மூடப்பட்டிருந்ததால், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள்  உணவு கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர்.
பசியைப் போக்கிய "அம்மா' உணவகங்கள்: இந்நிலையில், மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 407 உணவகங்களும் ஞாயிற்றுக்கிழமை முழுவீச்சில் செயல்பட்டன. இதனால், "அம்மா' உணவகங்களை நோக்கி அறை எடுத்து தங்கியுள்ள இளைஞர்கள், தொழிலாளர்கள் காலை முதலே குவியத் தொடங்கினர். 
இதுகுறித்து அம்மா உணவகத்தில் உணவருந்திய இளைஞர்கள் கூறுகையில், "அனைத்து உணவகங்களும் மூடவிட்டதால் உணவு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. எங்களைப் போன்ற அறை எடுத்து தங்கியுள்ளவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு மாநகராட்சி இந்த ஏற்பாட்டை செய்திருந்தது பாராட்டுக்குரியது என்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், " சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 407 அம்மா உணவகங்களும் வழக்கம்போல் இயங்கின. ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆயிரக்கணக்கானோர் அம்மா உணவகங்களில் உணவு சாப்பிட்டனர். 
இதற்காக வழக்கத்தைவிட இருமடங்கு உணவு தயார் செய்யப்பட்டது. வீடற்றோர் தங்கிக் கொள்ள மாநகராட்சியின் 53 காப்பகங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், அவர்களுக்கான உணவும் வழங்கப்பட்டன. அதேபோன்று பேருந்து, ரயில்கள் நிறுத்தப்பட்டதால் தவித்தவர்களுக்கும் உணவுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT