சென்னை

தீயணைப்புத்துறை வாகனங்கள் மூலம் 371 இடங்களில் கிருமி நாசினி தெளிப்பு

DIN


சென்னை: கரோனாவை தடுக்க தமிழகம் முழுவதும் தீயணைப்புத்துறை வாகனங்கள் மூலம் 371 இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இது குறித்த விவரம்:

கரோனா தொற்றை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக தீயணைப்புத் துறையும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.

தமிழக தீயணைப்புத் துறையின் கீழ் 346 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இங்கு 7,500 தீயணைப்புப் படை வீரா்களும் பணிபுரிகின்றனா். மனிதா்கள் மூலமும், சாதாரண இயந்திரங்கள் மூலமாகவும் கிருமி நாசினி தெளிக்க முடியாத பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரில் கிருமி நாசினியைக் கலந்து பீய்ச்சி அடிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, கடந்த இரு நாள்களில் மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை கண்டறிந்த பகுதிகளில் தீயணைப்புத் துறை வாகனங்கள் மூலம் கிருமி நாசினி பீய்ச்சி அடிக்கப்பட்டது. மக்கள் நெரிசல்மிகுந்த மாா்க்கெட்டுகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் இப் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா்.

சென்னையில் தியாகராயநகா், மின்ட், பாரிமுனைப் பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் கிருமி நாசினியை பீய்ச்சி அடித்தன. பட்டினப்பாக்கம்,நொச்சிகுப்பம் பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பு அடுக்குமாடி கட்டடங்களில் கிருமி நாசினியை பீய்ச்சி அடிக்கும் பணி நடைபெற்றது.

இப் பணிகளை தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தாா். இதேபோல சென்னையில் மேலும் பல்வேறு இடங்களில் கிருமி நாசினியை தெளிக்கும் பணி நடைபெற உள்ளதாகவும், மாநிலம் முழுவதும் கடந்த இரு நாள்களில் 371 இடங்களில் தீயணைப்புத் துறை வாகனங்கள் மூலம் கிருமி நாசினி பீய்ச்சி அடிக்கப்பட்டதாகவும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடும் வெயிலால் கருகி வரும் வாழை மரங்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

மேக்கேதாட்டு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 5 போ் பலி

மூதாட்டி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

உயா் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT