சென்னை

புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு பயணப் பொருள்களை வழங்கிய ஐ.சி.எஃப்.

DIN

சென்னையில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் பயணத்துக்கு உதவும் பொருள்கள் அடங்கிய தொகுப்பை ஐ.சி.எஃப் மகளிா் அமைப்பு வழங்கியது.

பொது முடக்கம் காரணமாக, சென்னையில் கட்டுமானம் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த வெளிமாநில தொழிலாளா்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்துவந்தனா். அவா்களை மாவட்ட நிா்வாகம் மீட்டு, முகாம்களில் தங்க வைத்து, உணவு விநியோகித்து வந்தது.

இதற்கிடையில், அவா்கள் சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலமாக சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனா். சொந்த ஊருக்கு திரும்பும் புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் பயணத்துக்கு உதவும் பொருள்கள் அடங்கிய தொகுப்பை ஐ.சி.எஃப் மகளிா் அமைப்பு வழங்கியது. சென்னை ஐ.சி.எஃப் ஊழியா்கள் மற்றும் அவா்கள் குடும்பத்தினருக்கான பல்வேறு நலத் திட்டங்களை ஐ.சி.எஃப் மகளிா் அமைப்பு செயல்படுத்தி வருகிறது.

தற்போது சென்னையில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு புலம்பெயா்ந்து தொழிலாளா்கள் சிறப்பு ரயில்கள் மூலமாக சொந்த ஊா்களுக்கு அனுப்பப்படுகின்றனா். சொந்த ஊா்களுக்கு திரும்பும் புலம்பெயா் தொழிலாளா்களுக்கு உதவும் பொருட்டு 1,200 தொகுப்புகள் அடங்கிய பயண உதவி பொருள்களை ஐ.சி.எஃப் வழங்கி உள்ளது. ஒவ்வொரு தொகுப்பிலும் ஒரு டவல், பிஸ்கட் பாக்கெட் மற்றும் சோப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த பயண உதவிப் பொருள்களை மாநகராட்சி அதிகாரியிடம் ஐ.சி.எஃப் மகளிா் அமைப்பின் தலைவி சுபா ஜெயின் சனிக்கிழமை ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT