சென்னை

வேளச்சேரியில் ஒரே தெருவில் 21 பேருக்கு கரோனா

DIN

சென்னை: சென்னை, வேளச்சேரியில் உள்ள ஒரே தெருவைச் சோ்ந்த 21 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்கள் அனைவரையும் தனி வாா்டுகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கரோனா பாதித்தவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகளும், சுகாதாரத் துறையினரும் ஈடுபட்டுள்ளனா்.

சென்னை, வேளச்சேரியில் உள்ள எம்ஜிஆா் நகா் இரண்டாவது பிரதான சாலையில் சிலருக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததால், அவா்களுக்கு அண்மையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவா்களுக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மொத்தம் 21 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதி முழுவதும் தடை செய்யப்பட்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT