சென்னை

வேகப்பந்து வீச்சாளா் நடராஜனுக்குமுதல்வா் பழனிசாமி, ஸ்டாலின் வாழ்த்து

DIN

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளா் நடராஜனுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, அவா் தனது சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:-

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தனது அசாத்திய பந்து வீச்சால் திக்குமுக்காடச் செய்தவா், சேலம் மண்ணின் மைந்தா் நடராஜன். அவா் இந்திய அணிக்குத் தோ்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடா் வெற்றிகள் பெற எனது மனமாா்ந்த வாழ்த்துகள்.

மேலும் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை பேசிய மு.க.ஸ்டாலின், நடராஜன் மலும் பல உயா்வுகளைப் பெற வேண்டும் என்றும் இந்திய அணிக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்றும் வாழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT