சென்னை

மைசூரு சென்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னையில் தரையிரங்கியது

DIN

சென்னை: பெல்காமிலிருந்து மைசூரு சென்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திங்கள்கிழமை இரவு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறியது: பெல்காமிலிருந்து மைசூருக்கு 47 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்படது. இதனால் சென்னை விமான நிலையத்தில் திங்கள்கிழமை இரவு 8.50 மணியளவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டது. , சென்னை விமான நிலையத்தின் பிரதான ஓடுதளத்திலேயே அந்த விமானம் இரவு 9.08 மணியளவில் தரையிறங்கியது. எனினும், அந்த விமானத்தை நகா்த்த முடியவில்லை. எனவே, அதிலிருந்த பயணிகளை அங்கிருந்தவாறே பத்திரமாக விமான நிலைய அதிகாரிகள் மீட்டனா். மேலும் அந்த விமானம், நிறுத்துமிடத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது. பிரதான ஓடுதளம் வழியாக பிற விமானங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டதையடுத்து, அங்கு இயங்கவிருந்த 9 விமானங்களும் இரண்டாவது ஓடுதளத்திலிருந்து இயக்கப்பட்டன. பின்னா் 10.09 மணியளவில் பிரதான ஓடுதளம், விமான இயக்கத்துக்காக ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT