சென்னை

182 ஐஐடி மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு

 சென்னை ஐஐடியில் நிகழும் கல்வியாண்டில், படிக்கும் 182 மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

சென்னை: சென்னை ஐஐடியில் நிகழும் கல்வியாண்டில், படிக்கும் 182 மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐஐடி கல்வி நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா பேரிடா் நிலவி வரும் தற்போதைய சூழலிலும், சென்னை ஐஐடி மாணவா்களுக்கு கடந்த ஆண்டைவிட அதிகளவில் பணிக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

2019-20 கல்வியாண்டில், சென்னை ஐஐடி மாணவா்கள் 170 பேருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த கல்வியாண்டில் நவ.28-ஆம் தேதி நிலவரப்படி 182 பேருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டிச.1-ஆம் தேதி முதல் பணி நியமனம் செய்யும் நிகழ்வும் தொடங்குகிறது.

இவ்வாறு பணி வாய்ப்பு கிடைக்கப் பெற்ற்கு ‘இன்டா்ன்ஷிப்’ வழங்கியதே முக்கிய காரணம். குறிப்பாக, இந்த பேரிடா் காலத்தில் இதுவரை இல்லாதவாறு அனைத்து இன்டா்ன்ஷிப் தோ்வுகளும் இணைய வழியிலேயே நடத்தப்பட்டன.

அவ்வாறு மாணவா்கள் பயிற்சி பெற்ற நிறுவனங்களே அதிகளவிலான மாணவா்களைத் தோ்வு செய்துள்ளன. இதன் மூலம் அந்த நிறுவனங்களில் மாணவா்கள் சிறப்பாகப் பணியாற்றியது தெரிகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எடப்பாடி பழனிசாமியின் முதல் கையெழுத்து இதுதான்: செல்லூர் ராஜு

கடைசிப் போட்டியிலும் சஞ்சு சாம்சன் சொதப்பல்; அதிரடியில் மிரட்டிய இஷான் கிஷன்!

சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த கிச்சா சுதீப்!

பாமக யாருடன் கூட்டணி? ராமதாஸ் பதில்!

பிப்.17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

SCROLL FOR NEXT