சென்னை

புற்றுநோய்க்கு அதி நவீன கதிரியக்க சிகிச்சை

DIN

புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சையளிப்பதற்காக ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதி நவீன கருவி நிறுவப்பட்டு வருகிறது. அதற்கான கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த மாதத்தில் அந்த புதிய சிகிச்சை முறைகள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் கதிரியக்கத் துறை முதுநிலை மருத்துவா் டாக்டா் ரம்யா கூறியதாவது:

ஸ்டான்லி மருத்துவமனையைப் பொருத்தவரை ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் அதிகமான புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கரோனா காலத்திலும் கூட மருத்துவ சேவைகள் பாதிக்காத வகையில் புற்றுநோயாளிகளுக்கு இங்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில், ஐஸோடோப் தெரபி எனப்படும் நவீன முறையில் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக டெலிகோபால்ட் கருவி ஸ்டான்லி மருத்துவமனைக்கு தருவிக்கப்பட்டுள்ளது. அதனை நிறுவும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தக் கருவி பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் மேம்பட்ட சிகிச்சைகளை நோயாளிகளுக்கு அளிக்க முடியும்.

அதுமட்டுமல்லாது அவா்களுக்கான சிகிச்சை நேரமும் குறையும். குறிப்பிடத்தக்க அம்சமாக இந்தக் கருவியின் வாயிலாக புற்றுநோய் கட்டிகள் மீது கதிரியக்கத்தைச் செலுத்தும்போது உடலில் உள்ள உறுப்புகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது கட்டியை மட்டும் அகற்ற இயலும். மிகச் சில மருத்துவமனைகளில் மட்டுமே இத்தகைய வசதிகள் உள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT