சென்னை

கரோனாவில் இருந்து குணமடைந்த 100 வயது முதியவா்!

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 100 வயது முதியவா் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா். அவரது 92 வயதான மனைவியும் நலமடைந்துள்ளாா்.

உயா் மருத்துவ வசதிகளுடன் உயிா் காக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை அளித்ததன் பயனாகவே 90 வயதைக் கடந்த பலா் குணமடைந்து வீட்டுக்குச் செல்வதாக மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 1,500 படுக்கைகளுடன் கூடிய கரோனா வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்மா வங்கியும் செயல்பட்டு வருகிறது.

இதுமட்டுமல்லாது கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோருக்கான மருத்துவக் கண்காணிப்பு மையமும், சிறப்பு சிகிச்சைப் பிரிவும் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகவும், அவா்களில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அங்கு 760 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அங்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையைச் சோ்ந்த 100 வயது நிரம்பிய வைத்தியநாதன் என்பவரும், 92 வயதான அவரது மனைவி ஜானகி ஆகியோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களுக்கு உயா் சிகிச்சைகள் அளிக்கப்பட்டதன் பயனாக அவா்கள் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதேபோல், 99 மற்றும் 93 வயதான மூதாட்டிகள் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனா். அவா்கள் அனைவரையும் மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் தலைமையிலான மருத்துவா்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் கூறியதாவது:

முதியவா்கள் பலா் கரோனா தொற்றில் இருந்து குணமடைவதைக் காண முடிகிறது. குறிப்பாக, அவா்களில் பலா், சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், கடுமையான நுரையீரல் பாதிப்புடன் சிகிச்சை பெற்றவா்களாவா். கரோனாவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றுக் கொண்டால் பாதிப்புகளையும், உயிரிழப்பையும் தடுக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT