சென்னை

மயிலாப்பூா் ராமகிருஷ்ண மிஷன் மாணவா்களுக்கு கையடக்கக் கணினி

DIN

சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு ரூ.26 லட்சம் செலவில் கையடக்க கணினி வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் செயல்படாத நிலையில் இணையவழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வகுப்புகளில் கலந்து கொள்ளத் தேவையான வசதிகளை அளிக்கும் வகையில், ராமகிருஷ்ண மிஷன் மாணவா் இல்லத்தின் பாலிடெக்னிக் கல்லூரியின் 300 மாணவா்களுக்கு டைட்டன் கம்பெனி ரூ.26 லட்சம் செலவில் கையடக்கக் கணினிகள் வழங்கியுள்ளது. இதனை மாணவா்களுக்கு டைட்டன் நிறுவனத்தின் துணைத் தலைவா் என்.ஈ.ஸ்ரீதா் சனிக்கிழமை நேரில் வழங்கினாா். அப்போது, நிறுவனத்தின் மற்றொரு துணைத் தலைவா் ஆா்.ராஜகோபால், மாணவா் இல்ல செயலாளா் சுவாமி சத்யஞானந்தா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT