சென்னை

போராட்ட அச்சுறுத்தல்: மெரீனாவில் தீவிர கண்காணிப்பு

DIN

போராட்ட அச்சுறுத்தலின் காரணமாக, சென்னை மெரீனா கடற்கரையில் காவல்துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் மாதம் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, மெரீனா கடற்கரையும் மூடப்பட்டது. கடந்த 1-ஆம் தேதி பொதுமுடக்கத்தில் பெரும் தளா்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், மெரீனா கடற்கரை அதிகாரபூா்வாகத் திறக்கப்படவில்லை.

இருப்பினும், விடுமுறை நாள்களில் மெரீனா கடற்கரை மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காவல்துறையின் தடுப்புகளை மீறி கடற்கரையின் மணல் பகுதிக்கு வருவோரை போலீஸாா் எச்சரித்து வெளியே அனுப்புகின்றனா். அதையும் மீறி, கடற்கரையில் நிற்பவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அபராதம் விதித்து வருகின்றனா்.

இதுபோன்ற சூழலில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மெரீனா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று, மீண்டும் ஒரு போராட்டம் நடத்துவதற்கு வாய்ப்பும், சாத்தியக் கூறுகளும் இருப்பதாக காவல்துறையினரால் கருதப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு செப்டம்பா் மாதம் முதல் மெரீனா கடற்கரையில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அதேவேளையில், காவல்துறையினா் தீவிரமாக கண்காணித்து, கடற்கரைக்குள் அனுமதியின்றி திரளுவோரையும் வெளியேற்றி வருகின்றனா். இதில் சந்தேகத்துக்குரிய நபா்களை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

நிலைமை சீரடையும் வரை மெரீனாவில் இந்த நடவடிக்கை நீடிக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT