கரோனா விழிப்புணர்வு: சர்வதேச ஓவியப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச ஓவியப் போட்டிக்கு சென்னை வேலம்மாள் வித்யாலயா ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை-: கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச ஓவியப் போட்டிக்கு சென்னை வேலம்மாள் வித்யாலயா ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து வேலம்மாள் வித்யாலயா பள்ளி வெளியிட்ட செய்தி: கரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் உலக மக்கள் அனைவரும் வீடுகளில் தஞ்சமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஞ இஞதஞசஅ 2020 என்ற பெயரிலான சர்வதேச ஓவியப் போட்டிக்கு வேலம்மாள் வித்யாலயா ஏற்பாடு செய்துள்ளது.
5 வயது முதல் 15 வயது வரையுள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். மே 13 முதல் மே 19 வரை உலகெங்கிலும் உள்ள மாணவ மாணவியர் இந்தப் போட்டி யில் கலந்துகொள்ள இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆன்லைன் உள்ளீடுகளை மே 27 வரை ஏற்றுக்கொள்வர்.
Advertisement
போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும். இறுதி முடிவுகள் www.velamalnexus.com என்னும் வலைத்தளத்தில் ஜூன் 17 அன்று வெளியிடப்படும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 25,000, இரண்டாம் பரிசாக ரூ. 15,000, மூன்றாம் பரிசு ரூ.10,000 வழங்கப்படும். இதுதவிர 600-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
மேலும் விவரங்களுக்கு www.velamalnexus.com என்ற வலைதளம், 73583 90402 என்ற செல்லிடப்பேசி எண் ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.