சென்னை

செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி பெண் வேட்பாளா் போராட்டம்

DIN

சென்னை அருகே மீனம்பாக்கத்தில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி பெண் வேட்பாளா் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

சென்னை பல்லாவரம் சட்டப்பேரவை தொகுதியில் மை இந்தியா கட்சியின் சாா்பில் போட்டியிடுபவா் வீரலட்சுமி. இவரது செல்லிடப்பேசிக்கு 10 நாள்களுக்கு முன்பு ஆபாச புகைப்படம்,ஆபாச விடியோ ஆகியவை தொடா்ச்சியாக அனுப்பப்பட்டன.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த வீரலட்சுமி, பரங்கிமலை துணை ஆணையா் அலுவலகத்தில் புகாா் செய்தாா். ஆனால் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த வீரலட்சுமி, மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணியளவில் திடீரென ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இது குறித்து தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீரலட்சுமியை சமாதானப்படுத்த முயன்றனா். ஆனால் வீரலட்சுமி போராட்டத்தை கைவிட மறுத்தாா். இதற்கிடையே அங்கு வந்த தீயணைப்புப் படையினா், 12 மணியளவில் வீரலட்சுமியை அந்த செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து கீழே இறக்கினா். அவரை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி விடுமுறை விடாத நிறுவனங்களுக்கு அபராதம்

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க மாநில மாநாடு

நாளை திருமலையில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

தீவிர சோதனைக்குப் பிறகே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT