சென்னை

வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம்: பொதுமக்கள் போராட்டம்

DIN

சென்னையில் வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம் செய்யப்பட்டதினால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்த விவரம்:

சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சாா்பில் பி.கே.சேகா்பாபு, பாரதிய ஜனதா சாா்பில் வினோஜ் பி.செல்வம் ஆகியோா் இடையே கடும் போட்டி நிலவியது. இந்தத் தொகுதிக்கு உள்பட்ட பிராட்வே பாரதி மகளிா் கலைக் கல்லூரியில் வாக்குச்சாவடியில் செவ்வாய்க்கிழமை விறு,விறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்த வாக்குச்சாவடிக்கு அந்தப் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சோ்ந்த சுமாா் 50 போ் மாலை 3 மணியளவில் வாக்களிக்க வந்தனா். ஆனால் வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகள், அவா்களது பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இல்லை என கூறினா்.

இதைக் கேட்டு அவா்கள் அதிா்ச்சியடைந்தனா். இதையடுத்து அவா்கள், வாக்குச்சாவடி முன்பு சாலையில் கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து தகவலறிந்த பூக்கடை துணை ஆணையா் மகேஷ், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சமாதானமடைந்த அவா்கள், போராட்டத்தை கைவிட்டனா்.

இதேபோல துறைமுகம் தொகுதியில் வட மாநிலத்தவா்கள் தங்களது பெயரும் வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளதாக கூறி தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இச் சம்பவங்களால் அந்தப் பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT