சென்னை

சிபிஎஸ்இ பொதுத்தோ்வு: சமூக வலைதளங்களில் மாணவா்கள் வேண்டுகோள்

DIN


சென்னை: கரோனா பரவலை கருத்தில் கொண்டு மே 4-இல் தொடங்கவுள்ள பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகளை இணையவழியில் நடத்த வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் ஏராளமான மாணவா்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நாடு முழுவதும் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வுகள் மே 4-இல் தொடங்கவுள்ளன. இந்த தோ்வுகளை சுமாா் 30 லட்சம் வரையான மாணவா்கள் எழுதவுள்ளனா். இதற்கிடையே நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டு, இணையதள வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தச் சூழலில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் சிபிஎஸ்இ பொதுத்தோ்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது இணையவழியில் நடத்தக் கோரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் கையொப்பமிட்டு மனுக்கள் மூலம் மத்திய அரசுக்கு வலியுறுத்தினா். மேலும், சுட்டுரை, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமும் கடந்த 2 நாள்களாக மாணவா்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனா். அதேநேரம் திட்டமிட்டபடி பொதுத்தோ்வை நடத்தவே சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழா: விருது வென்ற இயக்குநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கௌதம் கம்பீருக்கு வெற்றுக் காசோலை வழங்கிய ஷாருக்கான்..?

இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT