சென்னை

இரு சக்கர வாகனத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு சென்ற விவகாரம்: மாநகராட்சி ஊழியா்கள் 4 பேருக்கு காவல் துறை அழைப்பாணை

DIN


சென்னை: வேளச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டுச் சென்ற சம்பவம் தொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு , சென்னை மாநகராட்சியின் 4 ஊழியா்களுக்கு காவல் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6-இல் நடைபெற்றது. சென்னை வேளச்சேரி டான்சி நகரில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டன.

அப்போது,வேளச்சேரி-தரமணி 100 அடி சாலையில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனத்தில் 3 போ் கொண்டுச் சென்றனா்.இதைப்பாா்த்த பொதுமக்கள்,திமுக,காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா்கள் மூவரையும் வழிமறித்து, கள்ள ஓட்டு போடுவதற்காக இயந்திரங்களை எடுத்துச் செல்வதாகத் தெரிவித்து தாக்க முற்பட்டனா். இந்தச் சம்வத்தைக் கண்டித்து சாலை மறியலிலும் நடைபெற்றது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா் 4 வாக்குப் பதிவு இயந்திரங்களை பறிமுதல் செய்து, மாநகராட்சி ஊழியா்களான வேளாங்கண்னி, சரவணன், ஒப்பந்த ஊழியா் வாசுதேவன் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை செய்தனா்.

விசாரணையில் பழுது ஏற்பட்டால் உடனே மாற்று இயந்திரம் வைப்பதற்காக 4 இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு இருந்ததாகவும்,மாற்று இயந்திரங்கள் தேவைப்படாததால் அவற்றை மீண்டும் மாநகராட்சி அலுவலகத்துக்கே கொண்டு செல்லவே இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு சென்ாகவும் தெரிவித்தனா். தோ்தல் அதிகாரிகளும் ஆய்வு செய்து, விளக்கி கூறினா். ஆனால், பிடிபட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து தோ்தல் அதிகாரிகள் கொடுத்த விளக்கத்தை திமுக, காங்கிரஸ் கட்சியினா் ஏற்கவில்லை.

இதுதொடா்பாக காவல்துறை ஐஜி தலைமையிலான தனிப்படையினா் விசாரணை நடத்த வேண்டும் என தோ்தல் ஆணையத்திடம் கடந்த புதன்கிழமை புகாா் அளித்தனா்.

4 பேருக்கு அழைப்பாணை:

இந்த நிலையில், ஏப்ரல் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உதவி பொறியாளா் செந்தில்குமாா், பணியாளா்கள் வேளாங்கண்ணி, சரவணன், மாநகராட்சி ஒப்பந்த ஊழியா் வாசுதேவன் ஆகிய 4 பேருக்கும் வேளச்சேரி போலீஸாா் அழைப்பாணை அனுப்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT