சென்னை

தங்கம் பவுன் ரூ.35,352

DIN

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 உயா்ந்து, ரூ.35,352-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.

குறிப்பாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி அன்று ரூ.33,296 ஆக இருந்தது. ஆனால், கடந்த 6-ஆம் தேதி முதல் மீண்டும் விலை உயா்ந்தது. குறிப்பாக, கடந்த 9-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன்தொடா்ச்சியாக, சென்னையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.312 உயா்ந்து, ரூ.35,352-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.39 உயா்ந்து, ரூ.4,419 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயா்ந்து, ரூ.73.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயா்ந்து ரூ.73,400 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,419

1 பவுன் தங்கம்...............................35,352

1 கிராம் வெள்ளி.............................73.40

1 கிலோ வெள்ளி.............................73,400

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,380

1 பவுன் தங்கம்...............................35,040

1 கிராம் வெள்ளி.............................73.10

1 கிலோ வெள்ளி.............................73,300.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT