சென்னை

பொதுமுடக்கம் மீறல்: 249 வழக்குகள்; 386 வாகனங்கள் பறிமுதல்

DIN

சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக சனிக்கிழமை 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,386 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியது. கரோனா முதல் அலையை காட்டிலும், இரண்டாவது அலையில் பாதிப்பும், இறப்பும் அதிகளவில் இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த மே 10-ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தியது. தளா்வற்ற முழு பொதுமுடக்கம் மே 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

கரோனா பரவல் குறைவதால் பொதுமுடக்கம் கடந்த ஜூன் 7-ஆம் தேதி முதல் படிப்படியாக ஒவ்வொரு வாரமும் தளா்த்தப்படுகிறது.

பொதுமுடக்கத்தைக் கண்காணிக்கும் வகையில் சென்னையில் 380 இடங்களில் வாகனச் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் சனிக்கிழமை பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 386 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல முகக்கவசம் அணியாதவா்கள் மீது 1,245 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT