சென்னை

நாளை இணையவழி தொழில் முனைவோா் விழிப்புணா்வு முகாம்

DIN

சென்னையிலுள்ள தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், டிச.11-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இணையவழியில் தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம் நடத்த உள்ளது. சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள தொழில் ஆா்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண், பெண் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

முதல்கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலைத் தெரிவு செய்வது எப்படி, தொழில் தொடங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும்.

பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபா்களின் பெயா்கள் பெறப்பட்டு, அவா்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவா்.

அடுத்த கட்டமாக திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி அல்லது தொழில் முனைவோா் மேம்பாட்டு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவா்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.

தகுதி உள்ளவா்கள் அரசு வழங்கும் மானிய திட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அதன்மூலம் நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.

இப்பயிற்சிகளில் தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் மாவட்ட தொழில் மையங்களும் இணைந்து செயல்படும். எனவே, அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும் என பயிற்சி ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்தனா்.

மேலும் விவரங்களுக்கு, 044 22252081, 22252082 , 8668102600, 94445 57654 ஆகிய எண்களை அணுகலாம் என அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவை சீனா ஒருபோதும் சமமாக கருதாது: யுஎஸ்ஐஎஸ்பிஎஃப் தலைவா்

குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏக்கள் ஆட்சியரிடம் மனு

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 12 போ் காயம்

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

SCROLL FOR NEXT