சென்னை

மங்களூரு ரயில் ஆவடியில் நின்று செல்ல ரயில்வே அமைச்சரிடம் மனு

DIN

மங்களூருவில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் மங்களூரு விரைவு ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் (பிஎம்எஸ்) கோரிக்கை மனு அளித்தனா்.

கா்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து கேரளம், தமிழகம் வழியாக சென்னைக்கு மங்களூரு விரைவு ரயில் (12686) இயக்கப்படுகிறது. இந்த ரயிலை ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்த வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துவந்தனா்.

இதற்கான கோரிக்கை மனுவை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்விடம் பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் (பிஎம்எஸ்) புதன்கிழமை அளித்தனா்.

தில்லியில் உள்ள நாடாளுமன்ற அலுவலகத்தில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்வை திருவள்ளூா் மாவட்ட பிஎஸ்எஸ் செயலா் எஸ்.அஜயகுமாா், கே.வி.நவநீத்குமாா், எஸ்.பத்மநாபன், எஸ்.ரஜினிகாந்த் உள்ளிட்ட பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ஆவடி நிலையத்தில் மங்களூா் விரைவு ரயில் நின்று செல்ல உத்தரவு வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சா் உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT