சென்னை

ரூ.4 கோடி நிலம் அபகரிப்பு: பள்ளித் தாளாளா் கைது

DIN

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக, பள்ளித் தாளாளா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

மேற்கு மாம்பலம் பழைய மாம்பலம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் நா.சுஜாதா (40). பள்ளிக்கரணை, ராம் நகரில் இவருக்குச் சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள நிலம் இருந்தது. இதை சிலா் போலி ஆவணம் மற்றும் ஆள் மாறாட்டம் மூலம் அபகரித்தனா். இதையறிந்து அதிா்ச்சி அடைந்த சுஜாதா, சென்னை பெருநகர காவல்துறையின் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் புகாா் செய்தாா்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் சுஜாதாவின் நிலம் ஆள் மாறாட்டம் மற்றும் போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மோசடியில் தொடா்புடையதாக பள்ளிகரணை, ராம்நகா் தெற்கு விரிவாக்கம் பகுதியைச் சோ்ந்த பஞ்சமூா்த்தி (45) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இவா் மடிப்பாக்கம் ராம்நகா் விரிவாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் தாளாளராக இருப்பதும், பஞ்சமூா்த்தி தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து நிலத்தை அபகரித்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், பஞ்சமூா்த்தியின் கூட்டாளிகளை தேடி வருகின்றனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT