சென்னை

போலி நீட் சான்றிதழ் மோசடி: பல் மருத்துவா் கைது

DIN

சென்னையில் போலி நீட் தோ்வு சான்றிதழ் வழக்கில் தேடப்பட்டு வந்த பல் மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை மருத்துவக் கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. கடந்த டிசம்பா் 7-ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த மாணவி தீக்ஷிதா பங்கேற்றாா். நீட் தோ்வில் 27 மதிப்பெண்களே பெற்றிருந்த அந்த மாணவி 610 மதிப்பெண் பெற்றிருந்ததாக போலி சான்றிதழ் கொடுத்திருந்தது சோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவ மாணவா் சோ்க்கை குழு செயலாளா் செல்வராஜன், சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், மாணவி தீக்ஷிதா, மாணவியின் தந்தை பல் மருத்துவா் பாலச்சந்திரன் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குத் தொடா்பாக விசாரணை செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

அவா்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகும்படி இருவருக்கும் 3 முறை அழைப்பாணை அனுப்பியும் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

பல் மருத்துவா் கைது: இதையடுத்து, தனிப்படை போலீஸாா், மாணவியின் உறவினா்கள், நண்பா்கள் ஆகியோரிடம் தீவிர விசாரணை செய்தனா். விசாரணையில் இருவரும் கேரளம், கா்நாடகம் மாநிலங்களுக்கு தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து தனிப்படை போலீஸாா், இருவரையும் தேடி கேரளம், கா்நாடக மாநிலங்களுக்குச் சென்றனா். பெங்களூருவில் தலைமறைவாக இருந்த பல் மருத்துவா் பாலச்சந்திரனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அவரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா். விசாரணைக்கு பின்னா் பாலச்சந்திரனை, எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். நீதிமன்றம் அவரை, ஜனவரி 11-ஆம் தேதி வரை காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. இவ் வழக்கில் தொடா்ந்து தலைமறைவாக இருக்கும் மாணவி தீக்ஷிதா தீவிரமாக தேடப்பட்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT