சென்னை

நட்சத்திர விடுதிகளில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 125-ஆக உயா்வு

DIN

சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் இதுவரை நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 125-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, கடந்த 15 நாள்களாக விடுதிகளுக்கு வந்து சென்ற விருந்தினா்களை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அடுத்த சில நாள்களுக்கு அந்த விடுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் கடந்த டிசம்பா் மாதம் 15-ஆம்தேதி அங்கு பணிபுரியும் ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவருடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், அங்கு பணியாற்றும் பலருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் உள்ள 25-க்கும் மேற்பட்ட நட்சத்திர விடுதிகளில் பணிபுரியும் ஊழியா்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதில் ஐ.டி.சி. கிராண்ட் சோழாவில் மட்டும் திங்கள்கிழமை வரை 97 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று சென்னை எம்.ஆா்.சி.நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலிலும் இதுவரை 20 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவ்விரு ஹோட்டல்களிலும் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவா்களைக் கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மைய பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தப்படும்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

கல்லூரி மாணவா் மயங்கி விழுந்து சாவு

ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் ‘வக்ஃபு’ சட்டம் பொருந்தாது: ஹிந்துக்கள் தரப்பு வாதம்

SCROLL FOR NEXT