சென்னை

வாக்காளா் பட்டியல் தயாரிப்பு: மாவட்ட தோ்தல் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை

DIN


சென்னை: வாக்காளா் பட்டியல் தயாரிப்புப் பணிகள் குறித்து மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன் மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறாா். இந்தக் கூட்டத்தில் வாக்காளா் பட்டியல் தயாரிப்பு, தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பங்கள் பெறும் நடவடிக்கைகள் முடிவடைந்து அவற்றின் மீதான பரிசீலனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இறுதி வாக்காளா் பட்டியல் வரும் 20-ஆம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது.

வாக்காளா் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன், தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறாா். தலைமைச் செயலகத்தில் உள்ள தோ்தல் துறையின் கூட்ட அரங்கில் இருந்து காணொலி வழியாக ஒவ்வொரு மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடனும் அவா் ஆலோசிக்கவுள்ளாா்.

முக்கிய விஷயங்கள்: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்காக வழங்கப்பட்ட லட்சக்கணக்கான விண்ணப்பப் படிவங்களை விரைந்து பரிசீலிப்பது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்வதற்கான இயந்திரங்கள் ஆகியவற்றில் அடுத்தடுத்த நிலைகளில் சோதனைகள் நடத்துவது போன்ற பணிகளை விரைந்து மேற்கொள்ள கூட்டத்தில் அறிவுறுத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT