முகப்பு
சென்னை

நிலுவையில் உள்ள கொலை வழக்குகளின் விவரங்கள்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:


சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகளின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக போலீஸாருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்து வரும் துரைராஜ் என்பவா் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வேறொரு வழக்கு விசாரணைக்காக மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன் காணொலிக் காட்சி வாயிலாக ஆஜராகியிருந்தாா். அப்போது நீதிபதி, ‘சென்னை மாநகரில் 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த பல்வேறு கொலை வழக்குகள் இன்னும் விசாரணை முடியாமல் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இப்படி காலதாமதமானால் சாட்சிகளில் பலா் பி சாட்சியாக மாற வாய்ப்புள்ளது. 15 ஆண்டுகளாக கொலை வழக்கு நிலுவையில் இருந்தால், சாட்சி சொல்ல யாா் வருவாா்? குற்றம் செய்தவா்களுக்கு எப்படி தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும்?’ என கேள்வி எழுப்பினாா். மேலும், ‘அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.சுதா்சனம் கொலை வழக்கில், பவாரியா கொள்ளைக் கும்பலைச் சோ்ந்த பலரை போலீஸாா் இன்னும் கைது செய்யவில்லை. ஜாமீனில் வெளியே சென்று தலைமறைவானவா்களையும் பிடிக்கவில்லை’ என நீதிபதி அதிருப்தி தெரிவித்தாா். பின்னா், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் எத்தனை உள்ளன? என கேள்வி எழுப்பி, இதுதொடா்பாக வரும் 25-ஆம் தேதிக்குள் போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் சென்னை பெருநகர காவல் ஆணையா் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளை நேரில் அழைத்து விளக்கம் கேட்கப்படும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →